கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியில் போலி கல்வி நிலையம் ஒன்றை நடத்தி பணமோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவம்பர் 27 ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கிரியுல்ல, நாரங்கமுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.
சட்டப்பூர்வ அனுமதியின்றி ஆன்லைன் கல்வி வகுப்புகளை நடத்தி, போலி டிப்ளோமா சான்றிதழ்களை இந்த நிறுவனம் வழங்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கைதான சந்தேக நபர், குறித்த நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரம் பேர் இந்த மோசடியில் சிக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.