கனடா இந்தியா உறவு நிலை குறித்து வெளியாகியுள்ள செய்தி!

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் மீளவும் சுமூக நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவிற்கான இந்திய உயர்ஸ்தானிகர் சஞ்சய் குமார் வர்மா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான ராஜதந்திர முரண்பாட்டு நிலை நீடித்தது. எனினும் தற்பொழுது உறவுகள் ஓரளவு சுமூக நிலைக்கு திரும்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சீக்கிய மதத் ஹார்தீப் சிங் நிஜார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் முரண்பாட்டு நிலை உருவானது.

இந்தப் படுகொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளில் கடுமையான விரிசல் நிலைமை ஏற்பட்டது.

முரண்பாட்டு நிலையை தீர்த்து சுமூகமான நிலையை உருவாக்கும் வகையிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகர் வர்மா தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor