தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலிய வழக்கில் திருப்பம்

அவுஸ்திரேலிய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக அந்நாட்டு பொலிசார் “நியாயமற்ற முறையில்” நடந்து கொண்டதாக சிட்னி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வழக்குச் செலவு தொடர்பான வழக்கு இன்று (24) நீதிபதி சாரா ஹகேட் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், இதன்போது அரசு தரப்பில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பில் குறிப்பிடத்தக்க சில முரண்பாடுகள் இருப்பதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி குணதிலக்கவின் வழக்கு செலவுகளை அவர் பெற்றுக்கொள்ளும் வகையில் உறுதிச் சான்றிதழ் வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கைப்பேசி செயலி ஒன்றின் மூலம் பழக்கமான அவுஸ்திரேலிய யுவதி ஒருவரை குணதிலக் தனது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

அதன்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிட்னி பொலிசார் அவரை கைது செய்தனர்.

விசாரணையின் பின்னர், கடந்த செப்டெம்பர் மாதம் குணதிலக்க குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

பின்னர் அவர் தாயகம் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor