கனடா மாணவர் விசாவில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

கனடா அரசாங்கம் மாணவர் விசாவில் வருபவர்களிடம் முகவர்கள் செய்யும் மோசடிகளை தடுக்க புதிய விதிகளை அறிவித்துள்ளது.

அதன்படி கனடாவில் முதுகலை கல்வி கற்பிக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும், ஒவ்வொரு விண்ணப்பதாரரின் ஏற்பு கடிதத்தையும் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகத்துடன் சரி பார்க்க வேண்டும் என கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஏற்பு கடிதங்கள்
மேலும் இதுகுறித்து அமைச்சர் மார்க் மில்லர் தெரிவிக்கையில்,

“கனடாவுக்கு வரும் பிற நாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விரும்பவில்லை. பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஏமாற்றப்படாமல் பாதுகாப்பதே தனது நோக்கம்.

இந்த நடவடிக்கை இதற்கு முன்பு மாணவர்கள் ஏமாற்றப்பட்டதைப் போன்ற சூழல் ஏற்படாமல் தடுக்கும் என்பதுடன், உண்மையான ஏற்பு கடிதங்களின் அடிப்படையில் மட்டுமே படிப்பதற்கான அனுமதி வழங்கப்படுவதையும் உறுதி செய்யும்” என தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் அமைச்சகத்திடம் இருந்து சரி பார்க்கப்பட்ட ஏற்றுக் கொள்ளும் கடிதத்தை பெற வேண்டுமெனவும் இந்த புதிய கொள்கை வருகிற டிசம்பர் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor