நயினாதீவு ராஜமஹா விகாரையில் பெரஹரா

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ராஜமஹா விகாரையில் பெரஹரா ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.

 

பெரஹரா ஊர்வலம் நயினாதீவு அம்மன் ஆலய பின் வீதியில் இருந்து ஆரம்பமாகி நயினாதீவு ராஜமஹா விகாரையில் நிறைவடைந்தது.

இதில் கண்டிய நடனம், மயிலாட்டம், உயிலாட்டம், ஆதிவாசி நடனம்,இந்திய கதகலி நடனம், காவடியாட்டம்,கோலாட்டம்,குறவராட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுடான ஊர்வலம் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண கடற்படைத்தளபதி  ரீ.எம்.ஏ.ஏ. தென்னக்கோன் கலந்துகொண்டதுடன் நயினாதீவு ராஜமஹா விகாரையில் நடைபெற்ற பிரித்பாராயண சமய நிகழ்விலும் கலந்துகொண்டார்.

இவ் பிரித்பாராயண சமய நிகழ்வினை வணக்கத்திற்குரிய நவதகல பதுமகித்தி நாயக்க தேரர் நிகழ்த்தினர்.

இதில் கடற்படையினர், இராணுவத்தினர்,
பெளத்த குருமார்கள்,பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN