ஐரோப்பிய நாட்டு பெண்ணால் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆபத்து!

காலி – கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹிக்கடுவ நாரிகம பிரதேசத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் பயணித்த கார் நான்கு வாகனங்களுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

68 வயதான நெதர்லாந்து பெண் தனது பணிப்பெண்ணுடன் காலியில் இருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாக வாகனத்தை செலுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதி விபத்து
காலி நோக்கிச் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள், வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் வெளிநாட்டுப் பெண் ஓட்டிச் சென்ற கார் மோதியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஆண் ஒருவரும் இரண்டு பெண்களும் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையிலும், காயமடைந்த மற்றைய இருவர் பலப்பிட்டிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வெளிநாட்டுப் பெண் 20 வருடங்களாக இலங்கையில் தங்கியிருக்கின்றார். பொருட்களை வாங்குவதற்காக காலி நகருக்கு சென்றுள்ளார்.

பொலிஸார் விசாரணை
நாலகஸ்தெனிய பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் ஓட்டிச் சென்ற காரும் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வெளிநாட்டு பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

ஹிக்கடுவ பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.ஏ.லலித் சதருவானின் தலைமையில் விசாரணைகள் இடம்பெறவுள்ளது.

Recommended For You

About the Author: webeditor