மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்ட பணியில் இஸ்ரோ தீவிரமாக உள்ளது .இந்த ககன்யான் திட்டம் வரும் 2025 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கு முன்பாக மூன்று கட்ட சோதனைகளை மேற்கொள்கிறது இஸ்ரோ. அதன்படி முதற்கட்ட சோதனை இன்று நடைபெற்றது.
இன்று 8 மணி அளவில் முதற்கட்ட சோதனையை மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருந்த இஸ்ரோ பின்பு அந்த பரிசோதனை அரை மணிநேரம் தாமதமாக 8.30 மணிக்கு நடைபெறும் என அறிவித்திருந்தது.
மீண்டும் விண்கலனை ராக்கெட் மூலம் ஏவுவதற்கான கவுண்ட் டவுனை நிறுத்தியுள்ளதாக கூறிய இஸ்ரோ, அடுத்தகட்ட நகர்வு குறித்து அறிவிக்கப்படும் என தனது X தலத்தில் குறிப்பிட்டிருந்தது .
இந்த நிலையில், தற்போது கடைசி நேரத்தில் ராக்கெட் செல்லாததற்கான காரணத்தை கண்டுபிடித்து அதை சரி செய்துவிட்டதாகவும், ககன்யான் திட்ட மாதிரி விண்கலன் சோதனை காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவித்த இஸ்ரோ சரியாக 10 மணிக்கு ககன்யான் திட்ட மாதிரி விண்கலன் வானில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட 90 வினாடிகளில் ராக்கெட்டில் இருந்து பிரிந்தது ககன்யான் சோதனை விண்கலம்.
தரையில் இருந்து 17 கி.மீ. தூரம் வரை இந்த விண்கலம் அனுப்பப்பட்டு. பின்னர் மீண்டும் பூமிக்கு கொண்டுவரப்படும் சோதனை நடைபெற்றது. கடற்படை கப்பல் மூலம் பாராசூட்டில் இறங்கும் விண்கலன் கண்காணிக்கப்பட்டது.
ககன்யான் திட்ட மாதிரி விண்கலன் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில் இஸ்ரோ தலைவர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பேசுகையில், “ நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். மிக துல்லியமாக பாதுகாப்பு கலன் சென்றது. கடலில் விழுந்த க்ரு மாடலை ஆய்வுக்கு எடுத்து வருவோம்.எங்களுக்கு மிக பெரிய பயிற்சியாக எந்த தருணம் இருந்தது” என்றார்,