கோடை காலத்தில் நாம் ஆரோக்கியமான பழக்க வழக்கத்தை கடைபிடிப்பதோடு நேர்மறையான மாற்றங்களையும் கொண்டு வர உதவும் காலம்.
தண்ணீர் குடித்தல்
நாம் நம்மை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.குறிப்பாக கோடை காலத்தில் நீரிழப்பு ஆபத்துக்கள் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
இதனால் உடல் வெப்பநிலையை சீராக்குவதோடு உடற் செயற்பாடுகளை ஆதரிக்கவும் இது உதுவுகிறது.
ஆனால் இது தோல், செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த ஆற்றல் மட்டங்களிலும் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
அடிக்கடி நீர் அருந்துவதால் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
நடைப்பயணம்
இது எளிதான பயிற்சி என்பதோடு நாற்பட்ட நோய்களை உருவாக்கும் வாய்ப்பையும் குறைக்கின்றது.
தினமும் 30 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்ய முயற்சிக்கவும்.
பொது வாகனங்கங்கள் போக்குவரத்து என்பதை தவிர்த்து குறுகிய பயணங்களுக்கு நடைப்பயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டிச் செல்ல முயற்சியுங்கள்.
உறக்கம்
போதுமான நல்ல தூக்கம் பொது ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் முக்கியமானது.
உடல் பருமன், நீரிழிவு மற்றும் மனச்சோர்வு ஆகியவை குறைவான தூக்கத்தின் விளைவாக ஏற்படும்.
ஒவ்வொரு இரவும் 7-9 மணிநேர தூக்கத்தை இலக்காகக் கொண்டு, வழக்கமான தூக்க வழக்கத்தை அமைக்கவும். உறங்குவதற்கு முன் மொபைல் மற்றும் தொலைக்காட்சி பார்ப்பது ஆகியவற்றை தவிர்க்கவும்.
வாசிப்பது அல்லது வெதுவெதுப்பான குளியல் ஆகியவற்றுடன் ஓய்வெடுக்க முயற்சிக்கவும்.
ஆரோக்கியமான உணவு
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை சாப்பிடுவதில் கவனம் செலுத்துங்கள்.
பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிக கலோரி உணவுகளை உட்கொள்வதை கட்டுப்படுத்துங்கள்.
சோடா குடிப்பதற்கு பதிலாக தண்ணீர் குடிப்பது, வறுத்த உணவுகளுக்குப் பதிலாக வேகவைத்த உணவுகளைத் தேர்ந்தெடுப்பது.
தாவர அடிப்படையிலான உணவுகளைச் சேர்ப்பது போன்ற சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் உணவு முறையில் மாற்றம் கொண்டு வர முடியும்.
முலாம்பழம் சாப்பிடுங்கள்
கோடையில் அதிகம் முலாம் பழத்தை சாப்பிடுங்கள். அவற்றில் குறைவான கலோரி இருக்கிறது.
ஆனால் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
அவை நீரேற்றம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு எடை இழப்புக்கு உதவுகின்றன.
கோடையில் இவற்றை சேர்த்துக் கொண்டால் உடல் எடையை குறைக்கலாம்.