பேஸ்புக்குக்கு அடிமையான சகோதரனின் அலட்சியத்தால், 15 வயதான சிறுமியொருவர் குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் நடந்துள்ளது.
வயிற்றுவலியால் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், குழந்தை பெற்றெடுத்துள்ளார். இது தொடர்பாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியின் கர்ப்பத்தின் காரணம் வெளிப்பட்டது.
சிறுமி துஸ்பிரயோகம்
சிறுமியின் தாயார் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார். சிறுமியின் அண்ணனுக்கு பேஸ்புக் மூலம் நண்பர் ஒருவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அந்த நடபால் நண்பரின் வீட்டிற்கு ஒருமுறை வந்து சென்றுள்ளார்.
அதன் பின்னர் இரண்டாவது முறையாகவும் அந்த வீட்டிற்கு வந்து, இரவு தங்கியுள்ளார். அன்றைய தினம் தாயார் இரவுப் பணிக்காக சென்றுவிட, பிள்ளைகள் இருவரும், பேஸ்புக் நண்பரும் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
சிறுமியின் சகோதரன் இரவு வேளையில் கையடக்க தொலைபேசியில் பேஸ்புக்கில் மூழ்கியிருந்த சமயத்தில் பேஸ்புக் நண்பன், சிறுமியுடன் உறவில் ஈடுபட்டபின்னர் வீட்டிலிருந்து தப்பிச்சென்று விட்டார்.
இதனையடுத்து சிறுமி குழந்தை பிரசவித்ததை தொடர்ந்து, பொலிசார் பேஸ்புக் நண்பனை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
கைதான சந்தேகநபர் காலி பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.