யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் , யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் கடந்த (18) அன்று வெடி குண்டு வீசிய சம்பவத்தின் பகீர் பின்னனி வெளிகியுள்ளது.
வாகன திருத்தகத்தில் நின்ற கார் ஒன்றின் மீது விழுந்து வெடிகுண்டு பாரிய சத்தத்துடன் வெடித்த அதேநேரத்தில் வெடிக்காத நிலையிலும் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட, அதிக சேதம் விளைவிக்காத- பட்டாசு பாணி வெடிபொருளே வீசப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்குள் கற்களும், போல்ஸ்சும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டைனமற் வகை வெடிபொருள் மூலம் அந்த குண்டுகள் தயாரிக்கப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது .பணக்கொடுக்கல் வாங்கல் விவகாரத்தின் எதிரொலியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.
அதேவேளை தற்போது தாக்குதலுக்குள்ளாகியுள்ள வாகன திருத்தகத்திற்கு கடந்த வாரம் ஆவா குழுவின் பெயரில் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
பிரான்சில் நடந்த பணக்கொடுக்கல் வாங்கலொன்றின் எதிரொலியாக அந்த மிரட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது..