கஞ்சாவுடன் வீடொன்றில் வைத்து மூவர் கைது !

நமுனுகுல பிபிலேகம பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து 6050 மில்லிகிராம் கஞ்சாவுடன் 03 தடை செய்யப்பட்ட கத்திகள் (வாள்கள்) நேற்று (06) கைது செய்யப்பட்டதாக நுமுனுகுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்ப்படி பிபிலேகம கட்டுவலந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ​​46, 38.35 மற்றும் 28 வயதுக்குட்பட்ட செல்லகதரகம மற்றும் தலங்கம தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர்கள் வீட்டில் இருந்தபோதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களில் ஒருவரிடம் 03 தடைசெய்யப்பட்ட கத்திகள் (வாள்கள்) இருந்ததுடன், ஏனைய மூன்று சந்தேகநபர்கள் 2150, 2000 மற்றும் 1900 மில்லிகிராம் கஞ்சாவை தனித்தனியாக வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் எதற்காக அந்தப் பகுதிக்கு வந்தனர் என்பதை குறித்து விசாரணை நடத்தியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்.சுஜித் வெதமுல்லவின் ஆலோசனையின் பேரில் நமுனுகுல பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் எஸ்.பிஜிவரத்ன உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேக நபர்கள் மற்றும் வழக்குப் பொருட்கள் பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளன

Recommended For You

About the Author: webeditor