ஒளிவிழா-2022 பூமணி அம்மா அறக்கட்டளை,சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை(ITR)யுகம் வானொலி கனடா ஆகியவற்றின் இணை அனுசரணையுடன் பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி(ITR) பிரான்ஸ்-இலங்கை பணிப்பாளருமான யாழ் தீவகம் சரவணை மேற்கு வேலணையைச் சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்)அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 27/12/2022 இன்று யாழ்/செட்டித்தெரு மெதடிஸ் மிஷன் பாடசாலை மண்டபத்தில் அறக்கட்டளையின் 2022ஆம் ஆண்டுக்கான ஒளி விழா நிகழ்வு மிகவும் சிறப்பாக நடை பெற்றது.
குறித்த நிகழ்வுக்கு விருந்தினர்களாக பேராசிரியர் யோசேப் இராஜசூரியர்,அருட் தந்தை அருள்தாஸ்,சமூக சேவையாளர் பவதாரணி இரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்து சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பரிசு பொருட்களையும் வழங்கி வைத்தனர்.
மேலும் இன்றைய நிகழ்வில் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினரும் பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளருமான ந.விந்தன் கனகரட்ணம்,அறக்கட்டளையின் கல்விப்பிரிவு பொறுப்பாளரும் அதிபருமான க.சசிதரன்,அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம்,அறக்கட்டளையின் நிர்வாக சபை உறுப்பினர் அன்ரனி பெர்னாண்டோ பாஸ்கரன்,சர்வதேச தமிழ் வானொலி யாழ்ப்பாண கலையக பணியாளர்களான மதீஷன்,பிரிய லோஜினி,மகிழினி ஆகியோருடன் மாணவர்கள், பெற்றோர்கள்,சக பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்வினைச் சிறப்பித்தனர்.
மேற்படி நிகழ்வுக்கு நிதி அனுசரணையினை கனடா ரொரண்டோவைச் சேர்ந்த காலஞ்சென்ற அமரர் மனோகரனின் பத்தொன்பதாம் ஆண்டு நிறைவினையொட்டி பூமணி அம்மா அறக்கட்டளையின் ஆதரவாளர்களும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்,யாழ்ப்பாண சேவை,யுகம் வானொலி கனடா ஆகியவற்றின் அபிமானிகளாகவும் உள்ள திரு,திருமதி பிறேமா மனோகரன் அவர்கள் வழங்கியிருந்தார்.
அத்துடன் அவர்களது நிதி உதவி ரூபா நாற்பதினாயிரத்துக்கு பல பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் பூமணி அம்மா அறக்கட்டளையின் ஆதரவாளரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்-இலங்கை,மற்றும் யுகம் வானொலி கனடா ஆகியவற்றின் தீவிர அபிமானிகளுமான கனடா மொன்றியலைச் சேர்ந்த திரு மோகனதாஸ் மற்றும் திருமதி மோகனதாஸ் சாந்தகுமாரி தம்பதியினர்,மற்றும் அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான விசு செல்வராசா ஆகியோரின் நிதிப் பங்களிப்பில் அறக்கட்டளையின் நிர்வாகிகள்,வானொலி சேவையின் யாழ் கலையக பணியாளர்ளுக்கும் பரிசு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.