வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் கோவிலில் சிறப்புற நடைபெற்ற கஜமுக சூரசம்காரம்

வரலாற்று சிறப்பு மிக்க மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலில் கஜமுக சூரசம்காரம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றான மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் பிள்ளையார் கதை விரதத்தை சிறப்பிக்கும் முகமாக  ஆனைமுகப் பெருமான் கஜமுக சூரனை வதம் செய்யும் சூரசம்கார நிகழ்வு மிகவும் பக்தி பூர்வமாக இன்று மாலை இடம்பெற்றது.

விநாயகர் சஷ்டி விரதமானது வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு 19 ஆவது நாளான இன்று விசேட பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு இச் சூரசம்கார நிகழ்வு இடம்பெற்றது.

ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ திவாரக சிவாச்சாரியாரினால் ஆலய மூலப் பெருமாளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் வசந்த மண்டபத்தில் விசேட பூசை இடம்பெற்று கஜமுக சூரசம்கார நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு வெளி வீதியுலாவில் கஜமுக சூரன் வதம் செய்யப்பட்டு எலி வடிவெடுத்து விநாயகப் பெருமானின் வாகனமாக மாறும் காட்சி சிறப்பான முறையில் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.

இதனுடன் பாரம் பரிய கலை நிகழ்வுகளும் இடம் பெற்று  இச்சூரன்போர் வைபவம் வெகு சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும், இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: S.R.KARAN