பாரிசில் சிறுவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!

பாரிஸ் நகரத்தில் சிறுவர்கள் மின்சார ஸ்கூட்டர்கள் (trottinettes) பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளால் ஆபத்தானதாகக் கருதப்படுவதனால் இந்த வாகனங்களைப் பயன்படுத்துவதை சிறார்களுக்குத் தடை செய்ய உத்தேசித்துள்ளனர்.

மின்சார ஸ்கூட்டர்களை வாடகைக்கு விடும் நிறுவங்களில் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் கணக்கு ஆரம்பிக்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டுப்பாடுகள் மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யும் மற்றும் வாடகைக்கு விடும் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட உள்ளது.

மின்சார ஸ்கூட்டர்களுக்கு இலக்கத்தகடு பொருத்தும் முறையும் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டர் விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களின் சங்கங்கள் பல வருடங்களாக முன்வைத்த கோரிக்கைக்கமைய, இந்த நடவடிகை்கை எடுக்கப்பட்டுள்ளது.

இனிமேல், மின்சார ஸ்கூட்டர்கள் பெறுபவர்கள் தங்கள் அடையாள அட்டையை ஸ்கேன் செய்ய வேண்டும். மேலும் அவர்கள் ஸ்கூட்டரை முன்பதிவு செய்வதற்கு முன்பு அவர்கள் சட்டப்பூர்வ வயதுடையவர்களா என்பது சரிபார்க்கப்படும்.

லியோனில் தொடங்கி பிரான்ஸின் மற்ற முக்கிய நகரங்களில் இந்த நடவடிக்கை ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது. சிறுவர்கள் மின்சார ஸ்கூட்டர்கள் பயன்படுத்துவதனால் பாரிஸில் அதிகளவில் விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது.

அதற்கமைய, இந்த கட்டுப்பாடுகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதென பாரிஸ் மேயர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor