பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இத் தாக்குதல் இன்று மேற்கு பாகிஸ்தானில் பொலிஸ் வாகனத்தை குறிவைத்து தற்கொலை குண்டுதாரியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பலோசிஸ்தான் மாகாணததின் குவேட்ட நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்து.
மூவர் பலி
போலியோ தடுப்பூசி செலுத்தும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக செல்லவிருந்த பொலிஸ் குழுவொன்றை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் அடங்கியுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
TTP தாக்குதல்
AFP க்கு அளித்த அறிக்கையில், TTP தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது
இது ஆப்கானிஸ்தான் தலிபான் அமைப்பிலிருந்து வேறுபட்டு இயங்கும் அமைப்பு எனவும் தெரிவிக்ப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஓராண்டில், பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக பாக் அமைதி ஆய்வு நிறுவனம் (PIPS) தெரிவித்துள்ளது.