தமிழகத்தை சேர்ந்த பெண்ணொருவர் ஓர் ஆண்டில் 55,000 மில்லிலிட்டர் தாய்ப்பால் தானம் வழங்கி சாதனை படைத்துள்ளார்.
குழந்தையின் முதல் உணவாக அனைவராலும் கருதப்படுவது தாய்ப்பால்.
பல்வேறு காரணங்களால் பல தாய்மார்களுக்கு தாய்ப்பால் போதுமான அளவு சுரப்பதில்லை. மேலும் பிரசவத்தின் போது தாய் இறந்துவிட்டால் அந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைப்பதில்லை.
அந்த குழந்தைகளுக்காக கடந்த 2014ம் ஆண்டு முதல் தாய்ப்பால் வங்கி அறிமுகப்படுத்தப்பது.
சிந்து மோனிகா
இந்நிலையில், கோவையைச் சேர்ந்த மோனிகா என்பவர், கடந்த ஒரு ஆண்டில் 55,000 மில்லி லிட்டர் (55 லிட்டர்) தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ளார். இதன் மூலம் 1,500 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
கடந்த ஒரு ஆண்டில் 55,000 மில்லி லிட்டர் (55 லிட்டர்) தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ளார்.
அவரின் இந்தப் பணியை, ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளது.
குறைவடையும் குழந்தைகளின் இறப்பு வீதம்
இது தொடர்பில் சிந்து மோனிகா கூறுகையில், “தாய்ப்பால் தானம் செய்யலாம் என முடிவு செய்தபோது, என் கணவர் ஒத்துழைப்புக் கொடுத்தார்.
`அமிர்தம் தாய்ப்பால் குழு’ மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு தாய்ப்பால் தானம் செய்து வருகிறேன். என் குழந்தை பிறந்த 100 நாளில் இருந்து தானம் செய்கிறேன். தற்போது குழந்தைக்கு 19 மாதங்கள் ஆகிவிட்டன” என தெரிவித்துள்ளார்.
மேவும், தாய்ப்பால் கிடைக்காமல் குழந்தைகள் இறப்புகூட போகின்றனர். தாய்ப்பால் தானம் மூலம் குழந்தைகளின் இறப்பு கணிசமாக குறைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.