அமெரிக்க மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் தெரிவு!

அமெரிக்காவின் – மேரிலேண்ட் மாநிலத்தின் முதல் இந்திய வம்சாவளி துணை நிலை ஆளுநர் என்ற பெருமையை அருணா மில்லர் என்ற பெண் பெற்றுள்ளார்.

ஆந்திர பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட அருணா மில்லர் அமெரிக்காவில் குடியேறியுள்ளார்.

இந்நிலையில், மேரிலேண்டில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அவர் வெற்றிப்பெற்றுள்ளார்.

அதேபோல், மேரிலேண்டின் ஆளுநராக அக்கட்சியைச் சேர்ந்த வெஸ் மூர் தேர்வாகியுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor