முட்டை குறித்த எச்சரிக்கை தகவல்!

முட்டை பல ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குவதுடன் உடலுக்கு தேவையான புரதம் மற்றும் இயற்கையான கொழுப்பும் அதில் கிடைக்கிறது.

முட்டையில் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது என்பது பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளதுடன் இது ஆரோக்கியமான செல்களை உருவாக்குகிறது.

முட்டை மிகவும் சத்தான உணவு என்றாலும், முட்டை சாப்பிட்ட பிறகு என்ன சாப்பிட வேண்டும் என்பது முக்கியம்.

முட்டையுடன் சாப்பிட கூடாத உணவுகள்
முட்டையை சாப்பிட்ட உடனே வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இவை இரண்டும் வயிற்றின் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். இது மலச்சிக்கல், வாயு மற்றும் குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

முட்டை மற்றும் மீனை ஒன்றாக சாப்பிடுவது அல்லது ஒன்றன் பின் ஒன்றாக சாப்பிடுவது தோல் வெடிப்புகளை ஏற்படுத்தும். இது புரத ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

பலர் பன்னீரையும் முட்டையையும் கலந்து அல்லது ஸ்பெஷல் ரெசிபி செய்து சாப்பிடுகிறார்கள். பன்னீர் மற்றும் முட்டை இரண்டும் ஆரோக்கியமான கலவை அல்ல. இவை அனைத்தும் சேர்ந்து செரிமான அமைப்பை சேதப்படுத்தும்.

முட்டை சமைக்கும் போது பலர் எலுமிச்சை சாற்றை சேர்க்கிறார்கள். முட்டை உள்ள கொழுப்பு எண்ணெய் மற்றும் எலுமிச்சை இரண்டு சேரும் போது ஏற்படும் எதிர்வினை உடல நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

ஒரு நாளைக்கு 2 முட்டைகளை சாப்பிட்டால் அது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதை விட அதிகமாக உட்கொள்ள விரும்பினால் மருத்துவரை அணுக வேண்டும்.

அதிக உடற்பயிற்சி செய்பவர்கள் முட்டைகளை அதிகம் சாப்பிட வேண்டும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor