கனடாவில் வங்கி மோசடி சம்பவங்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக அலைபேசி வாயிலாக இடம்பெறும் வங்கி சார் மோசடிகள் உயர்வடைந்துள்ளன.
குரல் வழி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் ஊடாக இவ்வாறான மோசடிகள் அதிக அளவில் இடம்பெற்று வருகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அலைபேசிகளை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் கனேடியர்களிடமிருந்து பண மோசடி செய்வதற்கு முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரையிலான காலப்பகுதியில் 2769 அலைபேசி வழி வங்கி மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வங்கிகளில் அல்லது நிதி நிறுவனங்களில் பணியாற்றுவதாக தெரிவித்து இவ்வாறு வாடிக்கையாளர்களிடம் பணம் மோசடி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2020 ஆம் ஆண்டு இவ்வாறான மோசடி சம்பவங்கள் எண்ணிக்கை 1147 எனவும் 2021 ஆம் ஆண்டு மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை 2212 எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்வடைந்துள்ளது என சுட்டி கட்டப்பட்டுள்ளது.
அலைபேசி வாயிலாக குரல் வழியாகவோ அல்லது குறுஞ்செய்தி ஊடாகவோ மேற்கொள்ளப்படும் மோசடிகள் தொடர்பில் மக்கள் போதிய அளவு தெளிவுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் வருகின்றனவா அல்லது மோசடிக்காரர்கள் இவ்வாறான தகவல்களை அனுப்பி மோசடி செய்கின்றார்களா என்பது குறித்து வாடிக்கையாளர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான வங்கி மோசடி சம்பவங்கள் கூடுதல் எண்ணிக்கையில் பதிவாகியிருக்கலாம் எனவும், அனைவரும் மோசடிகள் பற்றிய தகவல்களை வெளியிடுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.