வரி பதிவு இலக்கத்தை பெற ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவு

உள்நாட்டு இறைவரி திணைக்களம் (IRD) 2023ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வரி பதிவுகளை தன்னார்வ மற்றும் பிற பதிவுகள் மூலம் கண்டுள்ளது. நாட்டில் 5 மில்லியன் உயர் வருமானம் ஈட்டுபவர்களை அடையாளம் காண உள்நாட்டு இறைவரி திணைக்களம் முற்படுவதாக திணைக்களத்தின் சிரேஷ்ட... Read more »

காதலியை கொலைசெய்த பாராலிம்பிக் வீரர் விடுதலை: ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க தடை

தனது காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பாராலிம்பிக் தடகள வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் விடுதலை செய்யப்பட்டார். தென்னாப்பிரிக்க நீதிமன்றத்தால் கடுமையான நிபந்தனைகளுடன் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார், இதன்படி, 2029 வரை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.... Read more »
Ad Widget

ஐக்கிய மக்கள் சக்தியில் மாற்றம்

ஐக்கிய மக்கள் சக்தியில் விரைவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அத்துடன், மேலும் பலர் கட்சியுடன் கைகோர்க்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர விரைவில் தம்முடன் இணையவுள்ளதாக அவர்... Read more »

சுகாதார அமைச்சின் மற்றுமொரு அதிகாரி கைது

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் மற்றுமொரு அதிகாரி இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேரத் குமாரவே சுகாதார அமைச்சில் வைத்து கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.... Read more »

மூன்று சட்டமூலங்களுக்கு அங்கீகாரம்

தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலம், மத்தியஸ்த சபை (திருத்த) சட்டமூலம், வலுவுறுத்தல் சட்டமூலம் ஆகிய மூன்று சட்டமூலங்களுக்கு நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு... Read more »

தென் கொரியா மீது வட கொரியா தாக்குதல்: போர் மூளும் அபாயம்

தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியில் வட கொரியா திடீர் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தியதையடுத்து போர் பதற்றம் உருவாகியுள்ளது. இந்த தீவு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில், 200 இற்க்கும் மேற்பட்ட பீரங்கி... Read more »

சுற்றுலாத் தளமாகும் விக்டோரியா நீர்த்தேக்கம்

விக்டோரியா நீர்த்தேக்கத்தை இலங்கையில் உள்ள பிரபல்யமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையில் மிகப்பெரி நீர்த்தேக்கங்களில் ஒன்றாக கருதப்படும் விக்டோரியா நீர்த்தேக்கமானது மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 1985 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவால் கட்டப்பட்டது. இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான... Read more »

சுமார் 6 ஆயிரம் மசாஜ் நிலையங்கள் இலங்கை

ஸ்பா (SPA) எனும் பெயரில் நடத்தப்பட்டு வரும் மசாஜ் நிலையங்களில் சுமார் 50 ஆயிரம் இளைஞர்கள் பணிபுரிந்து வருகின்றமை தெரியவந்துள்ளது. ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி, நாடு முழுவதும் சுமார் 6,000 மசாஜ்... Read more »

தேசிய மக்கள் சக்தியால் நாட்டை கையாள முடியாது

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு நாட்டை எவ்வாறு ஆட்சி செய்வது என்பது தெரியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இதனை அவர் தனது “X“ கணக்கில் பதிவிட்டுள்ளார். ”தேசிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றை அமைத்தால் அவர்கள் சர்வதேச இறையாண்மை பத்திர... Read more »

மூடப்படும் மஹவ – அனுராதபுரம் ரயில் பாதை

மஹவ முதல் அனுராதபுரம் வரையான வடக்கு ரயில் பாதையை பூரண புனரமைப்புக்காக நாளை முதல் மூடவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பகுதிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பந்துல குணவர்தன யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் விசேட... Read more »