தனது காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பாராலிம்பிக் தடகள வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸ் விடுதலை செய்யப்பட்டார்.
தென்னாப்பிரிக்க நீதிமன்றத்தால் கடுமையான நிபந்தனைகளுடன் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார், இதன்படி, 2029 வரை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளேட் ரன்னர் என்ற புனைப்பெயர் கொண்ட 37 வயதான ஆஸ்கார் பிஸ்டோரியஸ், 2013 ஆம் ஆண்டு தனது காதலியான ரீவா ஸ்டீன்காம்பை சுட்டுக் கொலைசெய்தார்.
அவர் தனது காதலியை குளியலறையில் கதவு வழியாக சுட்டுக் கொன்றார், இதன்போகு குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
எனினும், தான் திருடன் என நினைத்து சுட்டுக் கொன்றதாக பிஸ்டோரியஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் மனிதப் படுகொலைக்கான முந்தைய தீர்ப்பை இரத்து செய்ததையடுத்து, 2015ஆம் ஆண்டு பிஸ்டோரியஸ் கொலைக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
பிஸ்டோரியஸ் ஒரு வயதுக்குக் குறைவான வயதில் கால்களை இழந்தார், பின்னர் செயற்கைக் கருவியை நம்பி உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரராக மாறினார்.
இருப்பினும், பிஸ்டோரியஸ் தனது தடகள வாழ்க்கையின் சிறந்த பகுதியை சிறையில் கழிக்க வேண்டியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.