கிழக்கு மாகாணத்தின் சேவைகளை பாராட்டிய IMF

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவினர் திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானைச் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர். கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள், வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், கிழக்கு மாகாணம் குறுகிய காலத்தில் அடைந்து வரும் வளர்ச்சிக்கு... Read more »

அனர்த்தங்களுக்கு மத்தியில் பொங்கலை கொண்டாட தயாராகும் மட்டக்களப்பு மக்கள்

பிறக்கவிருக்கும் தைத்திருநாளை வரவேற்பதற்கு உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தயாராகிவருகின்றனர். வெள்ள அனர்த்தங்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தைத்திருநாளை கொண்டாடுவதற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்களும் தயாராகிவருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தக நிலையங்களிலும் பொதுச்சந்தை பகுதிகளிலும் மக்கள் பொருட்கொள்வனவில் ஈடுபட்டுள்ளதை காணமுடிகின்றது. பொங்கலுக்குரிய பொருட்கள் மற்றும் உடைகள்... Read more »
Ad Widget

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மேலும் ஒத்திவைப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் மேலும் நீடிக்கப்பட்டு ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். இதற்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதிவரையில் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. “தற்போதைய காலநிலை முன்னறிவிப்புகளால் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துகளை கவனமாக... Read more »

மட்டக்களப்பு – கொழும்பு ரயில் சேவைகள் வழமைக்கு

வெள்ளம் காரணமாக நேற்று ரத்து செய்யப்பட்ட மீனகயா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உட்பட கொழும்பு மற்றும் மட்டக்களப்புக்கு இடையிலான ரயில் சேவைகள் இன்று மாலை முதல் வழமைக்கு திரும்புமென ரயில்வே கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more »

அம்பாறையில் வெள்ளம் – போக்குவரத்தும் பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை, துறைவந்தியமேடு போன்ற தாழ்நில பகுதிகளில் வெள்ள நீர் பெருக ஆரம்பித்துள்ளன. தொடர்ச்சியாக... Read more »

மட்டக்களப்பின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை தொடக்கம் பெய்துவரும் அடைமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கடந்த 24மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 123.3மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக பெய்வரும் மழை... Read more »

15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு: மூவர் கைது

மட்டக்களப்பு – காத்தான்குடி – புதுகுடியிருப்பு பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை அழைத்துச்சென்று கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 3 பேர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கடந்த சனிக்கிழமையன்று (06)... Read more »

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் லசந்தவின் நினைவு தினம் அனுஷ்டிப்பு

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று (08) காலை 10 மணிக்கு மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்கு இலங்கை செய்தியாளர் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும்... Read more »

புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து பயணிக்க விரும்புகின்றேன்: சிறிதரன் எம்.பி

பொதுச்சபை உறுப்பினர்களின் மனப்பூர்வமான ஆதரவினை பெற்று தமிழரசுக் கட்சியில் தலைவராக தெரிவாவேன் என்ற நம்பிக்கை உண்டு என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இடம்பறெ்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும்... Read more »

முதலில் தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தல்

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள எந்த தேர்தலையும் எதிர்கொள்வதற்கு இலங்கை தமிழரசுக்கட்சி தயார் நிலையில் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பில் செட்டிபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.... Read more »