தங்க நகைகளுடன் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் குவியும் இலங்கையர்கள்.
உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பலர் அதிக விலைகளை பயன்படுத்திக்கொள்ள அடகுக்கடைகளில் உள்ள தங்க பொருட்களை விற்க தூண்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சிலர் தங்க நகைகளை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அதிகளவு அடகுவைத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வட்டி விகிதங்கள் அதிகரிப்பு மற்றும் தங்க விலை உயர்வின் காரணமாக அடகு வைக்கப்பட்ட தங்கத்தை மீட்டெடுக்க முடியாத நிலையில், அவற்றில் மேலதிக பணத்தை பெற தூண்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றது.

