மன்னாரில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம். பல விடயங்கள் ஆராய்வு.

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை 10  மணியளவில் மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில்  பிரதியமைச்சரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற... Read more »

தலைமன்னாரில் கடலாமை இறைச்சி விற்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது.

கடல் ஆமையினை இறைச்சியாக்கி விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகத் தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் (28.01) செவ்வாய்கிழமை, தலைமன்னார் ஸ்டேஷன் குடியிருப்பு பகுதியில் வைத்து கடல் ஆமையினை இறைச்சியாக்கி ஒருவர் விற்பனை செய்வதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய,... Read more »
Ad Widget

மன்னாரில் வீடொன்று முற்றாகத் தீக்கிரை.

மன்னார் சாந்திபுரம் பகுதியில் இன்று (27.01) திங்கள்,காலை குடிசை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக  வீடு  முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது. கிராம மக்களினால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மன்னார் சாந்திபுரம் சிறுவர் பூங்காவிற்குப் பின் பகுதியில் உள்ள வீடொன்றே தீப்பற்றி... Read more »

33 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது!

தலை மன்னாருக்கு வடக்காக உள்ள கடற்பரப்பில், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 33 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று காலை கைது செய்துள்ளனர். இந்திய மீனவர்களுடைய 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை முன்னெடுத்த... Read more »

மன்னாரில் மீண்டும் வெள்ள அபாயம், அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் எச்சரிக்கை!

மன்னார் மாவட்டத்தில் அருவியாற்றினை  அண்டிய கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறு, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்னிலங்கைப் பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக  முக்கியமான பெரிய குளங்களின் வான் கதவுகள்... Read more »

மன்னாரில் புகையிரதப் பாதையருகே இளம்பெண்ணின் சடலம்!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு புகையிரத கடவையின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று(20.01)திங்கள் காலை அடையாளம் காணப்பட்டுள்ளது. இன்று (20) அதிகாலை 4.30 மணியளவில் தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் குறித்த பெண் மோதி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம்-இராணுவ சிப்பாய் உள்ளடங்களாக மூவர் கைது-பொலிஸார் தெரிவிப்பு.

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த  வியாழன் (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும்  சிப்பாய் ஒருவர் உள்ளடங்களாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவத்தில் பணியாற்றும்  சிப்பாய்   மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா கடற்கரை பகுதியில்... Read more »

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு மன்னார் பொலிஸாரே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் -செல்வம் எம்.பி

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இன்றைய தினம்(16.01) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள இச்சம்பவத்திற்கு மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், மன்னார்... Read more »

மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி-இருவர் படுகாயம்.

மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி-இருவர் படுகாயம். மன்னார் நீதவான் நீதி மன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம்(16.01) வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு... Read more »

அனுராதபுரம் மற்றும் மன்னார் பகுதிகளில் புத்தசாசன சேவைகளுக்கான கௌரவிப்பினைப் பெற்றுக்கொண்டார் மேஜர் ௭ம்.விக்ரர் பெர்ணான்டோ!

அனுராதபுரம் மற்றும் மன்னார் பகுதிகளில் புத்தசாசனத்திற்காக செய்த சேவைகளுக்காக, கலாநிதி, தேசபந்து, தேச அபிமானி, சேவா கீர்த்தி, போன்ற தேசிய கௌரவ சன்மானங்கள், மன்னார், உயிலங்குளம் 542,பாதுகாப்புப் படைப்பிரிவினைச் சேர்ந்த மேஜர். M.விக்ரர் பெர்ணான்டோவிற்கு, பெருமை மிக்க மகா பரிசுத்த , மகா சங்க... Read more »