மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் மாயம்!தேடுதல் பணிகள் தீவிரம்!

மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை (13) மாலை நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் குறித்த இளைஞரை தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

பொலிஸார் மற்றும் அப்பிரதேச மக்கள் இணைந்து தேடிய போதும் நேற்று செவ்வாய்க்கிழமை(14.01) மாலை வரை குறித்த இளைஞன் மீட்கப்படவில்லை.

குறித்த இளைஞன் காணாமல் போனமை குறித்து  மடு பொலிஸாருக்கு கிடைத்த முறை பாட்டைத் தொடர்ந்து மடு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த நிலையில் குறித்த இளைஞன் நீராடச் சென்ற பகுதிக்குச் சென்ற பொலிஸார் மற்றும் அப்பிரதேச மக்கள் தேடுதல்களை மேற்கொண்டனர்.

எனினும் இதுவரை இளைஞன் மீட்கப்படவில்லை.

சம்பவத்தில் 23 வயதுடைய புஸ்ஸல்லாவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி காணாமல் போயுள்ள புஸல்லாவைப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய குறித்த இளைஞன் கடந்த திங்கட்கிழமை (13)  ஐந்து பேருடன் மடு தேவாலயத்திற்கு சென்றுவிட்டு மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற போதே நீரில் மூழ்கி மாயமானதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய காணாமல் போன நபரை கண்டறியும் நடவடிக்கையில் மடு பொலிஸார்  அப்பிரதேச மக்களின் உதவியைப் பெற்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: ROHINI ROHINI