யாழில் சீரற்றகாலநிலையால் உயிரிழக்கும் கால்நடைகள் குறித்து பொது மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் கால்நடைகள் பல உயரிழந்துள்ளன. வீசிய பலத்த காற்று மற்றும் குளிர்காரணமாக வடக்கு மாகாணத்தில் 300ற்கும் மேற்பட்ட மாடுகளும் 180ற்கும் மேற்பட்ட ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரி சங்க வைத்தியர் ச. சுகிர்தன் தெரிவித்துள்ளார். அவதானமாக மக்கள்... Read more »

யாழில் சட்டவிரோத மதுபானத்துடன் நால்வர் கைது!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – குடாக்கனை பகுதியில் நேற்றையதினம் (08.12.2022)கசிப்புடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றிவளைப்பு நடவடிக்கை இதன்போது அவர்களிடமிருந்து 1500 மில்லிலீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின்னர்... Read more »
Ad Widget

சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு குறிகட்டுவான் படகுச்சேவை நிறுத்தம்

சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் இடையிலான படகுச்சேவை இன்று (09) தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற... Read more »

யாழில் இருந்து சென்னைக்கான விமான கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

வரும் பன்னிரண்டாம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தமிழ் நாட்டின் சென்னை விமான நிலையத்திற்கு விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாணம் – சென்னை விமான கட்டணம் தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 6700 இந்திய... Read more »

வெளிநாட்டு மோகத்தால் பல இலட்சங்களை இழந்த யாழ் இளைஞர்கள்

வெளிநாட்டுக்கு செல்வதற்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் நீர்கொழும்பிலுள்ள முகவரொருவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்துபோன சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பாக இணையவழியூடாக பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வடமராட்சி குடத்தனையைச் சேர்ந்த த.தர்மதாஸ் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (07)... Read more »

யாழில் மாட்டிறைச்சி வெட்டிய நபர் கைது!

யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – நெடுங்காடு பகுதியில் இன்றையதினம் (07-12-2022) இறைச்சிக்காக மாட்டினை வெட்டிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் காரைநகர் பொலிஸ் காவல் அரண் பொலிஸாரால் இந்த கைது... Read more »

யாழில் குளியலறை வாளிக்குள் தவறி வீழ்ந்த குழந்தை சிகிச்சைபலனின்றி உயிரிழப்பு!

குளியலறை வாளிக்குள் தவறி விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. நாராந்தனை வடக்கு, ஊர்காவற்றுறையைச் சேர்ந்த சசீபன் கெற்றியான் என்ற பச்சிளம் குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அவரின் பெற்றோர் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்கு சென்று இருந்தனர்.... Read more »

வானிலை குறித்து யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

வடக்கு மாகாணத்துக்கு நாளை மறுதினம் 8 ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் 10 ஆம் திகதி சனிக்கிழமை வரையிலான காலப் பகுதியில் கடும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை முன்னறிவிப்பில் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்தக் காலப் பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் 200 மில்லி மீற்றருக்கும்... Read more »

மீண்டும் ஆரம்பமாக இருக்கும் யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள்

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கான விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. வாரத்திற்கு 04 விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள்... Read more »

திருக்கார்த்திகை விரதத்தை முன்னிட்டு விளக்குகளை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டும் மக்கள்

திருக்கார்த்திகை விரதத்தை முன்னிட்டு சந்தையில் விளக்குகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். யாழ் மாவட்டத்தில் உள்ள சந்தை வியாபார நிலையங்களில் இன்று விளக்குகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுப்பட்டிருந்தனர். இதேவேளை யாழ் நல்லூர் திருநெல்வேலி வியாபார சந்தைப்பகுதியிளும் விற்பனை மும்முரமாக இடம்பெற்றிருந்தது.... Read more »