யாழில் தனிமையில் இருந்த பெண்ணிடம் மோசடி

யாழ்.அச்சுவேலி – வளலாயில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்து வழங்குவதாக தெரிவித்து தனிமையில் இருந்த விசேட தேவையுடைய பெண்ணிடம் இனந்தெரியாத ஒருவரால் பணம் அபகரிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர் ஒருவர் கோப்பாய் பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள்... Read more »

யாழில் பட்டபகலில் வீடு உடைத்து கொள்ளை!

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் பட்டப்பகலில் வீடு உடைத்து 09 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் வசிப்போர் அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில் புதன்கிழமை (5) தொழில் நிமிர்த்தம் அவர்கள் வெளியில் சென்ற வேளை வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில்... Read more »
Ad Widget

திருடனை தப்ப விட்ட மனைவியை தாக்கிய கணவன்

யாழில் தோட்டம் ஒன்றில் வாழைக்குலை வெட்டியவனை கையும் களவுமாக பிடித்த நிலையில், திருடனை மனைவி பாவம் பார்த்து தப்பிக்க விட்டதை அடுத்து கணவர் மனைவொஇயை நையப்புடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் யாழ் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வாழைக்குலை வெட்டிய... Read more »

யாழில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த முதியவர்

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் முதியவர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர் இன்றைய தினம் தண்ணீர் எடுக்க சென்ற போது தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Read more »

வழக்கம்பரை அம்மன் ஆலய மண்டபத்தில் வழங்கப்பட்ட உதவி திட்டங்கள்

இன்றையதினம் வழக்கம்பரை ஆன்மீக அறக்கட்டளை மற்றும் சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை ஆகியன இணைந்து நடாத்திய உதவித்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு வழக்கம்பரை அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவியாக தையல் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் சங்கானை... Read more »

நேற்றைய தினம் இடம்பெற்ற யாழ்.சாவகச்சேரி – பாரதி பாலர் முன்பள்ளி சிறார்களின் ஆக்கத்திறன் கண்காட்சி

யாழ்.சாவகச்சேரி – பாரதி பாலர் முன்பள்ளிச் சிறார்களின் ஆக்கத்திறன் கண்காட்சி இன்று (04) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தரும், தமிழ் இணையக் கல்விக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான க. ரஜனிகாந்தன் விருந்தினராக கலந்து சிறப்பித்தார். இதன்போது முன்பள்ளிச்... Read more »

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி சோமசுந்தர புலவர் மண்டபத்தில் இடம்பெற்ற விழுப்புணர்வு ஓவிய கண்காட்சி

“விழித்தவரெல்லாம் பிழைத்துக் கொள்வார்” என்ற தொனிப்பொருளிலான போதைப்பொருள் விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி இன்றைய தினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப் புலவர் மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் திருமதி வதனி தில்லைச்செல்வன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலாநிதி, செஞ்சொற்செல்வர் ஆறு... Read more »

யாழில் சட்டவிரோதமாக இயங்கிய சிறுவர் இல்லம் குறித்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

யாழ்.இருபாலை பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 13 சிறுவர்கள் மீட்க்கப்பட்டுள்ள நிலையில், இல்லத்தில் இருந்த சிறுமிகள் துன்புறுத்தப்பட்டமை அம்பலமாகியுள்ளது. அதோடு மீட்கப்பட்ட சிறுமிகள் பல திடுக்கிடும் தகவல்களியும் வெளியிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டாய மதமாற்றம் இருபாலை பகுதியில் உள்ள கானான் ஐக்கிய... Read more »

நண்பனுடன் கடலுக்கு சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

யாழ். ஊர்காவற்றுறையில் நண்பனுடன் கடலுக்குச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். திருகோணமலை, புளியந்தோப்பைச் சேர்ந்த (வயது 27) உடையவரே ஊர்காவற்றுறைப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். ஊர்காவற்றுறை 9ஆம் வட்டாரத்திலிருந்து நேற்றிரவு நண்பருடன் ஜக்சன் ஆழ்கடலுக்குச் சென்றுள்ளார். ஜக்சனுக்கு மீன்பிடித் தொழிலில் அனுபவமில்லை... Read more »

யாழில் அனுமதி இன்றி நடாத்தப்பட்ட சிறுவர் இல்லத்தில் இருந்து சிறுவர்கள் மீட்பு!

யாழ். இருபாலையில் கிருஸ்தவ சபை ஒன்றினால் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்நடத்தை அலுவலர்களினால் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை, மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவ அறிக்கைக்காக யாழ் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ... Read more »