கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ் இளைஞர் ஒருவர் கைது!

போலியான ஆவணங்களை பயன்படுத்தி மலேசிய அதிகாரிகளை ஏமாற்றி மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜோர்தான் செல்ல முயற்சித்த யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த இளைஞர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். குடி வரவு குடி அகழ்வு... Read more »

கடும் மழையால் நீர் மட்டம் அதிகரிப்பு!

கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பிலும் லபுகமிலும் 106.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. தென் மாகாணத்தில் தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக ஜிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more »
Ad Widget

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிதி இராஜாங்க அமைச்சர்

இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சரான ரஞ்சித் சியம்பலாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இன்றைய தினம் காலை அவசர சிகிச்சைக்காக அமைச்சர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உணவு நச்சுத்தன்மை காரணமாக அவர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அமைச்சர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை... Read more »

இந்திய இராணுவம் இலங்கை வந்தால் திரும்பி செல்லாது!

இலங்கையில் மீண்டும் கலவரம் ஒன்று ஏற்பட்டால், அதனை அடக்குவதற்கு வரும் இந்திய இராணுவம் மீண்டும் நாட்டைவிட்டுத் திரும்பிச்செல்லாது. என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஏனெனில் சீனா போன்ற பிற வெளிநாட்டு சக்திகள் இலங்கையில் ஆதிக்கம் செலுத்துவதை... Read more »

நாடுபூராவும் நிறுவப்பட இருக்கும் ‘சினோபெக்’ எரிபொருள் கிளைகள்

சீன எரிபொருள் நிறுவனமான ‘சினோபெக்’ எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் நாடு பூராகவும் தமது கிளைகளை நிறுவவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சராக காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சினோபெக் நிறுவனம் தமது... Read more »

தர்மலிங்கத்தின் நினைவஞ்சலி நிகழ்வு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி. தர்மலிங்கத்தின் 38 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று தாவடியிலுள்ள தர்மர் நினைவுத் தூபியடியில் நடைபெற்றது. இதில் நினைவுப்பேருரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறைப் பேராசிரியர் கே. ரி. கணேசலிங்கம் நினைவுப்பேருரையை ஆற்றினார்.   இந்த நினைவஞ்சலி... Read more »

சுகாதார அமைச்சருக்கு எதிராக வவுனியாவில் கையெழுத்து போராட்டம் ஆரம்பம்

சுகாதார அமைச்சரை மாற்றுமாறு கோரி வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கையெழுத்துப் போராட்டமானது, ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட கிளையினால் வவுனியா செட்டிக்குளத்தில் நேற்றையதினம் (01.09.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டிற்கு உடனடியாக தீர்வு வேண்டும் எனக்... Read more »

சப்புகஸ்கந்த பெட்ரோல் உற்பத்தி அலகை இடைநிறுத்த தீர்மானம்!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பெட்ரோல் உற்பத்தி அலகை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த அலகில் இடம்பெறவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8ஆம் திகதி வரையில் இடைநிறுத்துவதற்கு... Read more »

பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் மத்திய வங்கி

சட்டவிரோத பிரமிட் திட்டங்களுடன் இணைவதன் மூலம் ஒருவர் தனது பணத்தை இழக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, இத்தகைய திட்டங்களில் ஈடுபடவோ அல்லது முதலீடு செய்யவோ வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,... Read more »

புதிய நிறுவனம் ஆரம்பித்து 24 மணிநேரத்திற்குள் அதிகரித்த எரிபொருளின் விலை

புதிய நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என மிகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனுவெவ தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,... Read more »