வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 20 மாணவர்கள்

குளியாப்பிட்டிய பாடசாலையொன்றில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குளியாப்பிட்டிய இங்குருவத்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குளவிக் கொட்டு பாடசாலைக்கு அருகிலுள்ள மரமொன்றிலிருந்த குளவிக் கூட்டினை பருந்து தாக்கியதனால் கூட்டிலிருந்து... Read more »

பொது மகனை தாக்கிய பொலிசார் கைது!

கடையொன்றில் பியர் அருந்திக்கொண்டிருந்த இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் தலாத்துஓயா பொலிஸில் கடமையாற்றும் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தலாத்துஓயா குருதெனிய வீதியிலுள்ள கடையொன்றில் இடம்பெற்றுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் சந்தேக நபர்களான இரண்டு... Read more »
Ad Widget

உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் கொழும்பு துறைமுக நகரம்

எதிர்வரும் 26ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரம் , டுபாய் மற்றும் அபுதாபியிலுள்ள முதலீட்டாளர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான விதிமுறைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து... Read more »

கொழும்பில் திலீபனின் நினைவேந்தல் நடாத்த தடை உத்தரவு!

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (19) நடத்த திட்டமிடப்பட்டிருந்த நினைவேந்தல்கள் சிலவற்றை தடுக்கும் வகையில் கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழர் மக்களுக்காய் தன்னுயிரை ஈந்த திலீபனை நினைவு கூருவதற்காக கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுகளில் பொது மக்களுக்கு... Read more »

கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமொன்று மீட்பு!

ரத்கம, கிரிமெடிய தகன மேடைக்கு பின்னால் உள்ள கலப்பு பகுதியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ரத்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி, சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த நபர் அதே பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் கை, கால்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், உடலில் பல இடங்களில் காயங்கள்... Read more »

அச்சுவேலியில் வறிய நிலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு !

அச்சுவேலி வளலாய் அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் முப்பத்தியாறு வறிய நிலை மாணவர்களுக்கு பூமணி அம்மா அறக்கட்டளையால் இன்று பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன.அச்சுவேலி வளலாய் பகுதியை பல ஆண்டுகளாக இலங்கை இராணுவம் அதி விஷேட பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி,தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.... Read more »

கைதான பெண்ணின் சொத்துக்களை முடக்கிய அரசு!

கண்டியில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிக்கிய பெண்ணின் சொத்துக்களை முடக்க கண்டி மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்டி, குண்டசாலை, மஹவத்தை பிரதேசத்தில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணொருவரின் சொத்துக்கள் நேற்று முடக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத சொத்துக்கள் குறித்த சொத்துக்களின் பொறுப்பு குண்டசாலை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.... Read more »

கடற்கரையில் இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

வத்தளை, பல்லியவத்தை கடற்கரையில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று (18) பிற்பகல் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உயிரிழந்தவர் 65 முதல் 70 வயதுக்குட்பட்ட, 05 அடி... Read more »

கொழும்பு நோக்கி வரும் சீனாவின் உளவுக் கப்பல்!

சீனாவின் ஷி யான் 6 எனும் உளவுக் கப்பல், கொழும்பு நோக்கிச் செல்வதற்காக மலாக்கா நீரிணைக்குள் பிரவேசித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஷி யான் 6 கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்தின் கப்பற்துறைக்கு செல்ல இலங்கை பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்துள்ளதாக 2கடந்த மாதத்தில் தகவல் வெளியாகியிருந்தன.... Read more »

ATM இயந்திரம் உடைத்து கொள்ளை!

நிட்டடம்புவ நகரில் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திர ஒன்று உடைக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் இயந்திரம் நேற்றிரவு உடைக்கப்பட்டு அதிலிருந்த 7,851,000 ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. விசாரணை இந்த நிலையில் அருகிலிருந்த சீசீரிவி கெமரா காட்சிகளின்... Read more »