அச்சுவேலியில் வறிய நிலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு !

அச்சுவேலி வளலாய் அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் முப்பத்தியாறு வறிய நிலை மாணவர்களுக்கு பூமணி அம்மா அறக்கட்டளையால் இன்று பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன.அச்சுவேலி வளலாய் பகுதியை பல ஆண்டுகளாக இலங்கை இராணுவம் அதி விஷேட பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி,தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

போரின் பின்பு அவ்வூர் மக்கள் மீண்டும் மீள் குடியேறி,பாடசாலையும் புனரமைக்கப்பட்டு,திறக்கப்பட்ட நிலையில்,மக்களின் வீடுகள் அழிக்கப்பட்டு,பொருளாதாரமும்,சுயதொழில் உட்பட அனைத்தும் பாதிப்புற்ற நிலையில்,பாடசாலையின் மாணவர்களும் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்கி வந்த சூழலில்,பாடசாலை சமூகம் அறக்கட்டளையினரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக,அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான திரு விசுவாசம் செல்வராசா அவர்களின் பணிப்பின் பேரில்,ரூபா நாற்பதினாயிரம் பெறுமதியான பாதணிகள் இன்று மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலையின் அதிபர் திரு கணபதிப்பிள்ளை ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இன்றைய உதவி வழங்கும் நிகழ்வில்,பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கை நாட்டிற்கான,செயலாளரும் யாழ்,மாவட்ட,முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான ந.விந்தன் கனகரட்ணம்,அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம்,நிர்வாகசபை உறுப்பினர் யா.தேவதாஸ்,ஆகியோர் பங்குபற்றி பாதணிகளை,வழங்கி வைத்தனர்.

மேலும் நிகழ்வில்,பெற்றோர்களுடன் ஆசிரியர்களான திரு.சின்னத்தம்பி கங்காதரன்,திரு கனகரத்தினம் தெய்வீகன் ஆகியோரும் பங்கு பற்றி சிறப்புரை நிகழ்த்தினர்.

Recommended For You

About the Author: S.R.KARAN