யாழ்ப்பாணம் – கொடிகாமம் – பருத்தித்துறை இடையே பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இன்று காலை பயணிகளுடன் பயணித்த பேருந்தே இவ்வாறு தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. கொடிகாமம் – புலோலி பிரதான வீதியில் குறித்த பேருந்து பயணித்துக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது.... Read more »
வடக்கிலுள்ள முயற்சியாண்மை, புத்தாக்கம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் கண்காட்சி மற்றும் செயன்முறை தொடர்பான பிரமாண்டமான நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது குறித்து தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதன்போது yarl IT Hub இன் தன்னார்வலர் சிவரதன்... Read more »
நாட்டில் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 என்ற இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை கேட்டுக் கொண்டுள்ளது. அரிசி கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க சோதனைகளை ஆரம்பித்துள்ளதாகவும், கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி... Read more »
ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாரியளவிலான ஊழல் மேசாடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் நீதிமன்றங்களுக்கு நிகரான குறிப்பிட்ட சில அதிகாரங்களை உடைய நாடாளுமன்ற... Read more »
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் ஜகார்த்தாவிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் UL 365 மற்றும் மாலைத்தீவில் இருந்து... Read more »
வடக்கில் வேலை வாய்ப்பில் நியமிக்கப்பட்டுள்ள 1 லட்சம் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ் பல்கலைக்கழகம், தொல்லியல் திணைக்களம் உட்பட வடக்கு மாகாணத்தில் உள்ள பல அரச நிறுவனங்களில் ஒரு லட்சம் வேலை வாய்ப்பின் கீழ்... Read more »
அரசாங்கத்திற்கு எதிராக, வவுனியா தபால் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இந்த கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா பிரதான தபால் நிலையம் முன்பாக அஞ்சல் தொலைத் தொடர்பு சேவையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மதியம் இடம்பெற்றது. தபாலக ஊழியர்கள் 20... Read more »
கொழும்பு மற்றும் பாகிஸ்தானின் லாகூர் இடையில் விமான சேவைகளின் எண்ணிக்கையை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகரித்துள்ளது. அதன்படி, நாளை (31) முதல் வாரந்தோறும் ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் விமான சேவைகள் இடம்பெறும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது. அதேவேளை ,... Read more »
ஹிங்குராக்கொடவில் கணவன் மனைவியை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிங்குராக்கொட பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ கிராமத்தில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகொலை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஹெட்டியாராச்சிலாகே லசந்த சந்தமாலி என்ற 27 வயதுடைய... Read more »
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 321.70 ஆகவும் விற்பனை விலை 332.49 ரூபாவாகவும் காணப்பட்டது. Read more »

