அரிசியை அதிக விலைக்கு விற்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

நாட்டில் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 என்ற இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை கேட்டுக் கொண்டுள்ளது.

அரிசி கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்க சோதனைகளை ஆரம்பித்துள்ளதாகவும், கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு குறைந்தபட்சம் 1 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அரிசியை வியாபாரிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தினமும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor