சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தரணி தலைமையிலான ஒரு அமைப்பு, இலங்கை அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக அறுபதுக்கும் மேற்பட்ட தடைகள் மற்றும் விசா தடைகளை விதிக்குமாறு கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ள உலகளாவிய அதிகார வரம்பிற்கு உட்பட்டு தொடர்ச்சியான வழக்குகளை தாக்கல் செய்துள்ளன. இவை அமெரிக்கா,... Read more »
இன்று முதல் சதொச கடைகளின் மூலம் ஒரு தேங்காய் 130 ரூபாவிற்கு விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு வாடிக்கையாளர் ஒரே நேரத்தில் மூன்று தேங்காய் மற்றும் ஐந்து கிலோ அரிசியை பெற்றுக்கொள்ள முடியும் என சதொச நிறுவனத்தின் தலைவர் சமித்த பெரேரா குறிப்பிடுகின்றார்.... Read more »
யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தங்கள் உயிர்களை இழந்த தமிழர்களையும் நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரேமாதிரியானவை என நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய(04.12.2024) அமர்வின் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “யுத்தத்தின்போது... Read more »
தேசிய பாதுகாப்புக்கு பிரஜைகளை பொறுப்புக்கூறும் வகையில் புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு தயார் என அமைச்சரவை பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே... Read more »
அரசாங்கத்தின் Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியின் உதவிகள் வழங்கப்படுமென உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு... Read more »
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நீண்ட காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகம்கொடுத்து வரும் பிரச்சினைகள்... Read more »
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அரசியல் இலஞ்சமாக 362 மதுபான அனுமதிப் பத்திரங்கள் 2024ஆம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதிவரை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான... Read more »
நாட்டில் சமாதானம் மற்றும் சமத்தும் நிலவ வேண்டும் என்பதற்காக தன்னுயிர் நீத்த ஈழ உறவுகளுக்கும், அதேபோல் சிங்கள மற்றும் முஸ்லிம் உறவுகளையும் நினைவு கூருவதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். தமது உரையில் அவர் மேதகு தலைவர் அவர்களுக்கு வீரவணக்கத்தை... Read more »
கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை மீளப்பெறும் நோக்கில் 03 புதிய சட்டமூலங்கள் அடுத்த காலாண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்றைய (04) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்படி, குற்றச் செயல்கள் தொடர்பான சட்டமூலம், மீட்பு,... Read more »
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் தெற்கில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் வடக்கில் குற்றவியல் சட்டத்தையும் பயன்படுத்துவதாக நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியது. என்றாலும், எதிர்க்கட்சி மீண்டும் இனவாதத்தை தூண்டும் வகையில் பொய்யான கருத்துகளை பரப்ப முற்படுவதாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டை நிராகரித்ததுடன், அனைவருக்கும்... Read more »

