இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நீண்ட காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகம்கொடுத்து வரும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் விளக்கமளித்தனர்.

சிவஞானம் சிறீதரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகநாதன் குகதாசன், சாணக்கியன் ராசமாணிக்கம், ஞானமுத்து ஸ்ரீநேசன்,கவீந்திரன் கோடீஸ்வரன், இளயதம்பி சிறிநாத்,துரைராசா ரவிகரன் ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: admin