யுவதியிடம் அத்துமீறிய அரச வைத்தியர் வெளியான அதிர்ச்சி

நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக சென்ற யுவதி ஒருவர் அங்கிருந்த வைத்தியர் ஒருவரால் தவறான முறைக்குட்படுத்தப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட யுவதி, சிகிச்சை பெற்று வந்த நிலையில், வைத்தியரால் தவறான முறைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸாரிடம் முறைப்பாடு கிடைத்துள்ளது. குறித்த வைத்தியர், இதற்கு முன்னர் அரசாங்க... Read more »

மகிந்த வைத்தியசாலையில் அனுமதியா

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் , மஹிந்த ராஜபக்ஷவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அந்த செய்திகள் தவறானவை என்றும், மஹிந்த ராஜபக்ஷ தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருப்பதாகவும்... Read more »
Ad Widget

முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கு விளக்க மறியல் நீடிப்பு

இலஞ்சம் பெறுவதற்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு... Read more »

மியன்மார் மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க இயன்றவரை ஒத்துழைப்போம்-எதிர்க்கட்சித் தலைவர்

மியன்மாரில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த பேரிடரால் இலங்கையும் நாட்டு மக்களும் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச செவ்வாய்க்கிழமை  (01) அன்று மியன்மார் தூதுவரிடம் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கான தனது கடமைகளை உயரிய பட்சத்தில் நிறைவேற்றுவதாகவும் எதிர்க்கட்சித்... Read more »

அனுராதபுரம் வைத்தியசாலையில் தொடரும் வேலை நிறுத்தம்.

பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு எதிராக, நாடு முழுவதும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் இன்று (13.03) காலை 8.00 மணியுடன் நிறைவுக்கு வந்தது. சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போதிலும், அனுராதபுரம் போதனா... Read more »

பெண்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல் பங்களிப்பு தொடர்பான கலந்துரையாடல்.

CMEV நிறுவனத்தின் ஏற்பாட்டில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் அரசியல் பங்களிப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மன்னாரில்  இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் தேர்தலில், இளைஞர் யுவதிகளின் பங்களிப்பு எவ்வாறு அமைந்திருக்கிறது என்பது பற்றியும் வடக்கு கிழக்கில் மக்களுடைய தேர்தல் சம்பந்தமான அறிவும் அது தொடர்பான ஈடுபாடும்... Read more »

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு பகிரங்க பிடியாணை.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கைக்கமைவாக இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம – பெலென பகுதியிலுள்ள விடுதியொன்றுக்கு அருகில் நடத்தப்பட்ட... Read more »

மாதம்பேயில் விபத்து மூவர் பலி.

மாதம்பே, கலஹிடியாவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிய விபத்தில் ஒரு சிறுமி உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். தலவில தேவாலயத்தில் வருடாந்திர திருவிழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிய‌ போதே, நேற்று (09) மாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர் முச்சக்கர... Read more »

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு.

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனம் மார்ச் மாதத்திற்கான சமையல் எரிவாயுவின் சில்லறை விலை திருத்தத்தை இன்று (06) வியாழக்கிழமை அறிவிக்க உள்ளது. இந்த விவகாரம் குறித்து நிதி அமைச்சகத்துடன் இன்று (06) கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.... Read more »

OL பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைப்பு.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அட்டைகள் தபால்மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும் தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்... Read more »