ஆபத்தான வடமராட்சி கிழக்கு கடலில் யாரும் நீராடுவதற்கு இறங்க வேண்டாம், தவிசாளர் கோரிக்கை..!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு இந்து சமுத்திரத்தில் இங்கி நீராட வேண்டாம் என பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தெரிவித்துள்ளார்.
வடகீழ் பருவ மழை காலம் ஆரம்பிக்கப்பட்டு கடல் கொந்தளிப்புப்பாக காணப்படுவதாகவும் இதனால் உயிரிழப்புக்கள் ஏற்படுவதாகவும், சுற்றுலா பயணிகள் உட்பட வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு வருகைதருவோர் கடலில் இறங்கி நீராட வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

