லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு.

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனம் மார்ச் மாதத்திற்கான சமையல் எரிவாயுவின் சில்லறை விலை திருத்தத்தை இன்று (06) வியாழக்கிழமை அறிவிக்க உள்ளது.

இந்த விவகாரம் குறித்து நிதி அமைச்சகத்துடன் இன்று (06) கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த கலைந்துரையாடலுக்குப் பிறகு, புதுப்பிக்கப்பட்ட எரிவாயு விலைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

Recommended For You

About the Author: ROHINI ROHINI