
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் , மஹிந்த ராஜபக்ஷவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அந்த செய்திகள் தவறானவை என்றும், மஹிந்த ராஜபக்ஷ தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.