மாதம்பேயில் விபத்து மூவர் பலி.

மாதம்பே, கலஹிடியாவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிய விபத்தில் ஒரு சிறுமி உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

தலவில தேவாலயத்தில் வருடாந்திர திருவிழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பிய‌ போதே, நேற்று (09) மாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்

முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட 9 பேர் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 32, 36 மற்றும் ஒரு வயதுடைய மினுவங்கொட மற்றும் ராகம பகுதிகளைச் சேர்ந்தவர்களே‌ உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், விபத்தின் போது காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி உட்பட இரு ஆண்கள், சிறுவர்கள் இருவர் மற்றும் இரண்டு சிறுமிகள் காயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: ROHINI ROHINI