பிரதி பாதுகாப்பு அமைச்சர் மன்னார் விஜயம்.(video)

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக நாடு முழுவதும் பதிப்புக்குள்ளான நிலையில்,மன்னார் மாவட்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன்கிழமை (27.11)காலை பிரதிப்  பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது. இதன்... Read more »

வைத்தியசாலைச் சமூகத்தின்,அமைதிவழிக் கவனயீர்ப்புப் போராட்டம்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின்,வைத்தியர்கள் ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் இணைந்து இன்றைய தினம்(26.11) மதியம் 1 மணியளவில் வைத்திய சாலைக்கு முன்பாக, அடையாள, கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை அமைதியான முறையில் முன்னெடுத்தனர். கொட்டும் மழையில் முன்னெடுக்கப் பட்ட,குறித்த போராட்டமானது,வைத்திய சேவைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்... Read more »
Ad Widget

தொடரும் கன மழையினால் அதிகரிக்கும் பாதிப்புகள். 5088 ஹெக்ரர் பயிர் செய்கை முற்றாக அழிவு.

நான்கு நாட்களாகப்  பெய்து வரும் தொடர் கன மழையினால் மன்னார் மாவட்டத்தில், 5088 ஹெக்ரர் பயிர் செய்கை முற்றாக அழிவுற்றுள்ளதாக, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் (26.11) செவ்வாய்க்கிழமை, மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார், இது... Read more »

சாரல் மழையுடன் பலத்த காற்று.வானிலை ஆய்வு மையத்தின் சிவப்பு அறிவிப்பு!

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (26) அதிகாலை 05.30 மணியளவில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என சிவப்பு அறிவிப்புடன் விஞ்ஞான கணிப்பு ஒன்றை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில்... Read more »

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டார் ரிசார்ட் எம்.பி. (Video)

மழை வெள்ளத்தினால் முகாம்களில். தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்ட, ரிஷார்ட் எம்பி, பாதிக்கப்பட்ட மக்களுக்குக்கு அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுக்குமாறு. மன்னார்,அரசாங்க அதிபர், க. கனகேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (25.11) திங்கள்,பிற்பகல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரச... Read more »

மன்னார் மாவட்டத்தில் குறைந்த தாழமுக்கம் காரணமாக ஏற்படவுள்ள அனர்த்தத்தை தடுக்க முப்படையினர் தயார் நிலையில்-

மன்னார் மாவட்டத்தில் குறைந்த தாழமுக்கம் காரணமாக ஏற்படவுள்ள அனர்த்தத்தை தடுக்க முப்படையினர் ,பொலிஸார் மற்றும் திணைக்கள அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாகவும்,மன்னார் மாவட்டத்தில் இருந்து மீனவர்களை மறு அறிவித்தல் வரை கடற் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் எனவும்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்,க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது... Read more »

தேசிய மக்கள் சக்தியின் வன்னி, பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்னார் விஜயம்.(video)

மன்னாரில்  மழை வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட மக்களின் நிலையை நேரில் கண்டறிய,  தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் மாற்றும் செல்லத்தம்பி திலகநாதன் ஆகியோர் இன்றையதினம் (24.11) ஞாயிறு, மன்னாருக்கு வருகை தந்திருந்தனர். நீரில் மூழ்கியுள்ள வயல் நிலங்கள்... Read more »

தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருவதுடன் பல கிராமங்கள் வீதிகள் நீருக்குள் மூழ்கியுள்ளன. காலநிலை மாற்றத்தால் மீனவர்கள் குறிப்பிட்ட தினங்கள் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில், குறிப்பாக மன்னார்... Read more »

அரிசி மாபியா ஆட்டம் முடிந்தது! இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி.

இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை விவசாய அமைச்சும் வர்த்தக அமைச்சும் இணைந்து சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்தா குறிப்பிடுகிறார். நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். நெல்... Read more »

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பேராசிரியர் கோமிக உடுகமசூரிய நியமனம்.

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியாக இருந்த கோமிகா, அமெரிக்காவின் அரசுப் பணியில் இருந்து விலகிய பிறகு இந்த நிலையை தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டுள்ளார். ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய மற்றும் MD ஆண்டர்சன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின்... Read more »