வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (26) அதிகாலை 05.30 மணியளவில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என சிவப்பு அறிவிப்புடன் விஞ்ஞான கணிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான அதி கனமழை பெய்யக்கூடும். அல்லது பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமாகாணத்தின் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, வடமேல் மாகாணத்தில் புத்தளம், மற்றும் வடமேல் மாகாணமான புத்தளம் மாவட்டங்களுக்கும் இந்த கனமழை தொடர்பாக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளில், மணிக்கு 60-70 கிலோமீற்றர் வரை வேகமாக காற்று அதிகரித்து வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் வடக்கு மாகாணத்தில் இன்று மணிக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், இந்த ஆபத்தான நிலை நாளையும்  தொடருமெனவும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: ROHINI ROHINI