இந்தியாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இலங்கை பெண் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

சென்னையில் சமீபத்தில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இலங்கையை சேர்ந்த 22 வயதான இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த 22 வயதான ஷோபனா என்ற பெண்ணே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்த நிலையில் தனது... Read more »

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை கேப்டன் தசுன் ஷனகா படைத்த புதிய சாதனை

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரின் போது இலங்கை கேப்டன் தசுன் ஷனகா புதிய சாதனைகளை படைத்துள்ளார். டி20 போட்டியில் டெத் ஓவர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை 50 மேல் ஓட்டங்கள் எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஷனகா பெற்றார். 2022 ஆம்... Read more »
Ad Widget

கடனட்டைகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட இளைஞன் கைது!

இலங்கையில் சுமார் 5 இலட்சம் கடன் அட்டைகளை பயன்படுத்தி இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த 18 வயதான இளைஞனை குற்றவியல் விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞன் 90 கடன் அட்டைகளை பயன்படுத்தி 55 லட்சம் ரூபாவுக்கு பொருட்களை கொள்வனவு... Read more »

இலங்கையில் சமூக ஊடக சட்டத்தை பயன்படுத்த நடவடிக்கை!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து இந்தியாவின் பதிலை இந்த மாத இறுதியில் பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். இதேவேளை, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார். பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும்... Read more »

யாழில் இடம்பெற்ற திடீர் விபத்தில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய குடும்பம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது தென்னை மரம் சரிந்ததில் வீடு பகுதி அளவில் சேதமாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அனலைதீவு மூன்றாம் வட்டாரத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை மார்கண்டு என்பவருடைய வீட்டிலேயே இன்றைய தினம் (06-01-2023) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது இருப்பினும், குறித்த வீட்டில் இருந்தவர்களுக்கு... Read more »

இன்றைய ராசிபலன் 07.01.2023

மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகச் செயல்படும் நாள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் குடும்பம் தொடர்பான விஷயத்தில் உங்களிடம் ஆலோ சனை கேட்டு வருவார்கள். சிலருக்கு அவ்வப்போது சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். மாலை யில் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு... Read more »

வட்டி அதிகரிப்பை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ள ஆசிரியர்கள்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பெற்ற கடனுக்கான வட்டி அதிகரிப்பை உடனடியாக நிறுத்துமாறு நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது. ஜனவரி 2ஆம் திகதி திங்கட்கிழமை ஆசிரியர் குழுவுடன் மக்கள் வங்கியின் பொது முகாமையாளரைச் சந்தித்த இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப்... Read more »

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு!

இலங்கையில் அரச ஊழியர்கள் தொடர்பில் அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி அமைப்புகள் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்கும் காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து இந்த அறிவிப்பு வெளியாகியள்ளது. அதன்படி, அரசியல் கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்கள் மற்றும் பிற கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில்... Read more »

புதிய வாக்களர் எண்ணிக்கை அதிகரிப்பு!

2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டின்படி கம்பஹா மாவட்டத்தில் மொத்தம் 1,833,602 நபர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது 2018ஆம் ஆண்டை விட 109,293 வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாக மாவட்ட தேர்தல் ஆணையாளர் அலுவலகம்... Read more »

நாட்டில் புற்றுநோய் மருந்துக்கு தட்டுப்பாடு!

நாட்டில் 15 முக்கிய புற்றுநோய் மருந்துகளிற்கான தட்டுப்பாடு காரணமாக 10 ஆயிரம் புற்றுநோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார். 90 வீதமான மருந்துகளிற்கு தட்டுப்பாடு புற்றுநோயாளிகளிற்கு 15 பிரதான மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்கின்ற... Read more »