அதிகாரத்தில் இருக்கும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்நியனாக மாறுவதுடன் அதிகாரம் இல்லாவிட்டால் அம்பியாக மாறிவிடுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,... Read more »
பலாங்கொடை வெலிகபொல பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, அவரிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கைதானவர் பலாங்கொடை – வெலிகபொல பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார்... Read more »
எதிர்வரும் மார்ச் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஆரம்ப பிரிவு பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தேசிய பாடசாலைகளில் வெளிநாட்டு மொழிகளைக் கற்பிப்பதற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 162 பட்டதாரிகளுக்கு... Read more »
சமூக ஊடகங்களால் தங்கள் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகக் கூறிய குடும்பத்தினரிடம் Meta CEO Mark Zuckerberg மன்னிப்பு கேட்டார். மெட்டா உள்ளிட்ட உலகின் முன்னணி சமூக ஊடக வலையமைப்பு நிறுவனங்களின் தலைவர்களை அமெரிக்க செனட் சபையின் முன் அழைக்கப்பட்ட போதே அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.... Read more »
பாகிஸ்தானில் பெப்ரவரி 8ஆம் திகதி பொது தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானை ஒட்டிய ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள பஜார் என்ற பழங்குடியின மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளரான ரெஹான் ஜெப் கான் என்பவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூட்டு நடத்தியுள்ளனர். மேலும், அவருடன் இருந்த... Read more »
தேர்தல்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் 16 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளை தேருநர் இடாப்பில் பதிவு செய்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சுபியான் தலைமையில் தனியார் கற்கை நிலையத்தில் இன்று (01) இடம்... Read more »
எரிபொருள் விலையில் நள்ளிரவு முதல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம, பஸ் கட்டணம் தொடர்பில் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளின்... Read more »
இலங்கையில் இன்றுமுதல் நிகழ்நிலை காப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. பல தரப்பினரின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த சட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது. சுதந்திரமான கருத்துரிமைக்கும் புத்தாக்கத்துக்கும், தனியுரிமைக்கு இந்தச் சட்டம் இடையூறாக இருக்கும் என அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்து... Read more »
அனைத்து 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் உக்ரேனுக்கு மேலதிகமாக 50 பில்லியன் யூரோ (54 பில்லியன் அமெரிக்க டொலர்) உதவி தொகையை வழங்க ஒப்புக் கொண்டுள்ளன. இந்தத் தகவலை ஐரோப்பிய ஒன்றிய பேரவையின் தலைவர் சார்லஸ் மைக்கேல் சமூக ஊடகத் தளமான எக்ஸில்... Read more »
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 310.54 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 320.40 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.... Read more »

