பாகிஸ்தானில் பொது தேர்தல் வேட்பாளர் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் பெப்ரவரி 8ஆம் திகதி பொது தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானை ஒட்டிய ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள பஜார் என்ற பழங்குடியின மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளரான ரெஹான் ஜெப் கான் என்பவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூட்டு நடத்தியுள்ளனர்.

மேலும், அவருடன் இருந்த 4 உதவியாளர்களும் சுடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.

இவருக்கு, முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியின் ஆதரவு வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இத்தாக்குதலையடுடுத்து, காயமடைந்த ஜெப் கான் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவருடைய உதவியாளர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin