சமூக ஊடகங்களால் தங்கள் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகக் கூறிய குடும்பத்தினரிடம் Meta CEO Mark Zuckerberg மன்னிப்பு கேட்டார்.
மெட்டா உள்ளிட்ட உலகின் முன்னணி சமூக ஊடக வலையமைப்பு நிறுவனங்களின் தலைவர்களை அமெரிக்க செனட் சபையின் முன் அழைக்கப்பட்ட போதே அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
சமூக ஊடக வலையமைப்புகளை வைத்திருக்கும் நிறுவனங்களின் தலைவர்களிடம் செனட் சபை சுமார் நான்கு மணிநேரம் கேள்வி எழுப்பியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மெட்டா, எக்ஸ் தளம், ஸ்னெப் செட், டிக் டொக் போன்ற நிறுவனங்களின் நிர்வாகன இயக்குநர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.