உக்ரேனுக்கு மேலும் 50 பில்லியன் யூரோ உதவித் தொகை

அனைத்து 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் உக்ரேனுக்கு மேலதிகமாக 50 பில்லியன் யூரோ (54 பில்லியன் அமெரிக்க டொலர்) உதவி தொகையை வழங்க ஒப்புக் கொண்டுள்ளன.

இந்தத் தகவலை ஐரோப்பிய ஒன்றிய பேரவையின் தலைவர் சார்லஸ் மைக்கேல் சமூக ஊடகத் தளமான எக்ஸில் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த ஒப்புதலானது உக்ரேனுக்கான அதனது ஆதரவையும், பொறுப்பையும் எடுத்துக் காட்டுகிறது.

உக்ரேன் ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலேன்ஸ்கியும் இந்த ஒப்புதலை வரவேற்றுள்ளதுடன், ” அனைத்து தலைவர்களாலும் எடுக்கப்பட்ட முடிவு மிகவும் முக்கியமானது, இது மீண்டும் வலுவான ஐரோப்பிய ஒன்றிய ஒற்றுமையை நிரூபிக்கிறது” என்று தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார்.

மேலும், உக்ரேனுக்கான தொடர்ச்சியான ஐரோப்பிய ஒன்றிய நிதி ஆதரவு நீண்டகால பொருளாதார மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

அதேநேரம், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவினை உக்ரேனிய பிரதமர் டெனிஸ் ஷ்மிஹாலும் வரவேற்றுள்ளார்.

Recommended For You

About the Author: admin