19 வயதுக்குட்பட்ட இளையோர் ஆசிய கிண்ணத்தை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டி தொடர் டுபாயில் நடைபெற்ற நிலையில் இன்று (21) இறுதிப் போட்டி இடம்பெற்றது.
பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 347 ஓட்டங்களை குவித்தது. அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ் 113 பந்துகளில் 172 ரன்கள் அதிரடியாக பெற்றார்.
இந்திய அணி தரப்பில் தீபேஸ் ரவீந்திரன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 348 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 26.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
இதன்மூலம் 12வது ஆசிய கிண்ணத்தை பாகிஸ்தான் இளையோர் அணி சவீகரித்துள்ளது.


