முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் வீட்டில் திருட்டு!

முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் அம்பலாங்கொடை இல்லத்தில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் ரூ. 300,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தேசப்பிரியவின் மனைவி அம்பலாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இரண்டு எரிவாயு சிலிண்டர்கள், ஒரு தொலைக்காட்சி,... Read more »

புதிய எம்.பிக்களுக்கு நாளை முதல் வழிகாட்டல் செயலமர்வு

– நவம்பர் 27 வரை 3 நாட்களுக்கு இடம்பெறும் – அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் ஹரிணி பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு நவம்பர் 25, 26, 27ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணி... Read more »
Ad Widget

வைத்தியர் ஷாபி சகாப்தீன் விவகாரம்: பிரதிப் பொலிஸ் மா இருவர் சிஐடியின் விசாரணை வலையில்!

தம்மைக் கைது செய்து துன்புறுத்தல் மற்றும் இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்ட சதித்திட்டமாக பொய்யான அறிக்கையை வெளியிட்டு ஆவணங்களை தயாரித்தமை தொடர்பில் குருணாகல் வைத்தியர் ஷாபி சகாப்தீன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் மா அதிபர் பிரியந்த... Read more »

தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகள் நாடாளுமன்ற கொடுப்பனவுகளைப் பெறமாட்டார்களாம்!

தேசிய மக்கள் சக்தியின் அனைத்துப்பொதுமக்கள் பிரதிநிதிகளும் கொடுப்பனவுகளைப் பெறுவதில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல் வள பிரதியமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரினதும் சம்பளம் பொது நிதியில் வரவு வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.... Read more »

ஜனாதிபதி அநுரவின் பிறந்த தினம் இன்று!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பிறந்த தினம் இன்று (24) 1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி பிறந்த அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தற்போது 56 வயதாகிறது. தம்புத்தேகம ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற பின்னர், தம்புத்தேகம மத்திய மகா வித்தியாலயத்தில்... Read more »

நாளை ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை; அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளை நாளை (25) ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்காக 2,312 பரீட்சை நிலையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இப் பரீட்சை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இம்முறை... Read more »

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (25) தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இந்த நிலை மேலும் தீவிரமடைந்து இலங்கையின் வடக்கு கடற்கரையை நோக்கி நகரலாம் என வளிமண்டவியல்... Read more »

பொதுத் தேர்தல் கடமையில் ஈடுபட்ட உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு விபரங்கள் அறிவிப்பு.!

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவு தொடர்பான சுற்றுநிருபம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்று நிருபத்திற்கமைய வாக்குப்பெட்டி, வினியோகம், மீள பொறுப்பேற்றல், தேர்தல் தினத்தன்று கடமை, வாக்கெண்ணும் கடமை என்பவற்றுக்காக... Read more »

கல்முனை மாநகர பிரதேசங்களில் அனர்த்தங்களை கட்டுப்படுத்த விஷேட குழு.!

மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவசர நடவடிக்கை.! வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காலநிலை சீர்கேடு காரணமாக ஏற்படவுள்ள அபாய நிலைமை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்கும் பொது மக்களை பாதுகாப்பதற்கும் மீட்புப்... Read more »

ஐந்து ஆண்டுகளில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமான இலக்கு

இலங்கையில் அடுத்த ஐந்து வருடங்களில் 36 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார். ”பொருட்கள் ஏற்றுமதி மூலம் தற்போது 12 பில்லியன் டொலர்... Read more »