கடந்த 22 நாட்களில் 194,553 சுற்றுலாப் பயணிகள் வருகை..!

கடந்த 22 நாட்களில் 194,553 சுற்றுலாப் பயணிகள் வருகை..!

2026 ஆம் ஆண்டு ஆரம்பமான முதல் 22 நாட்களுக்குள் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

அக்காலப்பகுதியில் ஒரே நாளில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளின் வருகை ஜனவரி 15 ஆம் திகதி பதிவாகியுள்ளதுடன், அன்றைய தினம் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10,483 ஆகும் எனவும் அதிகார சபை கூறுகிறது.

 

இந்த 22 நாட்களுக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடாக இந்தியா காணப்படுவதுடன், அந்த எண்ணிக்கை 35,177 ஆகப் பதிவாகியுள்ளது.

 

இதற்கு மேலதிகமாக, ரஷ்யாவிலிருந்து 19,930 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 19,893 பேரும் மற்றும் ஜேர்மனிலிருந்து 12,822 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin