ஞாயிறு ஆராதனையில் பங்கேற்காத சிறுமியை தாக்கிய பங்குத் தந்தை

சாகவச்சேரியில் உள்ள தேவாலயத்தில் ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத் தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பங்குத் தந்தையே இவ்வாறு சிறுமியைத் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் தந்தை... Read more »

மகளை தாயாக்கிய நபருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் தனது மகளை தாயாக்கிய ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். நேற்று (04) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேற்படி உத்தரவு வழங்கப்பட்டது. அத்துடன், துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மகளுக்கு 06... Read more »
Ad Widget

மின்சாரத்தை துண்டிக்கச்சென்ற ஊழியர்கள் மீது தாக்குதல்

மின்சாரத்தை துண்டிக்கச்சென்ற மின்சார சபை ஊழியர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் கம்பஹாவில் பதிவாகியுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான இரு ஊழியர்களும் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மின் கட்டணம் செலுத்தாத நிலையில், மின்சாரத்தை துண்டிக்க சென்ற... Read more »

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 77,487 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 746 பேர் உயிரிழந்துள்ளதாக... Read more »

2,600 கிராம உத்தியோகத்தர்கள் சேவைக்கு

புதிதாக 2600 கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். இதற்கான பரீட்சை நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. அதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக்... Read more »

மீள கையளிக்கப்படும் தொல்பொருட்கள் மக்கள் பார்வைக்கு

ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தின் போது இலங்கையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மீள கையளிக்கப்பட்ட சில தொல்பொருட்கள் இன்று முதல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளன. 1756 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட குறித்த தொல்பொருட்கள் அண்மையில் உத்தியோகபூர்வமாக இலங்கையிடம் கையளிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் குறித்த... Read more »

தெல்லிப்பழை வாள்வெட்டு விசாரணைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன்தொடர்புடைய குழுவினரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி காணொளிகளை அடிப்படையாக கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களை கைது செய்வதற்காக, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர்... Read more »

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பொது நிறுவனங்களாக மாற்றம்

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனமும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் தொடர்ந்தும் நஷ்டத்தை ஈட்டும் நிறுவனங்களாகக் காணப்படுவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரியவந்தது. குறித்த குழு அதன் தலைவர் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் கூடியபோதே... Read more »

சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்பு

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பாதுகாப்பாக வெளியே அழைத்து வரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் இருக்கும் சில்க்யாரா சுரங்கப்பாதை கட்டுமானத்தின் போது கடந்த நவம்பர் 12ஆம் திகதி சுரங்கப்பாதையின்... Read more »

உக்ரைனில் கடும் பனிப்புயலில் 10 பேர் பலி

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உக்ரைனில் கடும் பனிப்புயல் வீசி வருவதால், பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இரண்டு குழந்தைகள் உட்பட 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு உள் விவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.... Read more »